திருவண்ணாமலை மாவட்டம், போளுர் வட்டம்,பொத்தரை கிராமம், ஜவ்வாது மலை அடி வாரத்தில் எழுந்தருளவிற்க்கும் ஆலய திருப்பணி:
இந்த ஆலயம் அமைக்க காரணம் என்னுடைய முன்னோர்களுடைய காலத்தில் என் பட்டான், பூட்டன் கோவில் அமையவிருக்கும் இந்த நிலத்தில், விவசாயங்களும், பயிர்களும், செய்துள்ளனர். அக்காலத்தில் என் முன்னோர்கள் வழிபட்ட ஒன்டி முனீஸ்வரன், சங்கிலி கருப்பண்ணசாமி ரேணுகாம்பாள், காளியம்மன் மற்றும் பரிவர்த்தன தேவதைகளுக்கு படையலிட்டும் பூஜைகள் செய்தும் வந்துள்ளனர், இந்த கிராமம் செழிக்கவும் நோயற்ற வாழ்வு வாழவும் இந்த தெய்வங்கள் அருள் பாலித்துள்ளது. இந்த நிலத்தை ஒட்டியுள்ள மலையின் மேல் பல காலங்களுக்கு முன் வடஆற்காட்டை ஆண்ட மன்னர்கள் அங்கு தங்குவதற்கு கோட்டை கட்டியும் மக்களை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் வழிபட்ட ஸ்ரீதுர்க்கையம்மன், சப்த கன்னியர்கள்,ஒன்டி முனீஸ்வரன் கோட்டை கருப்பசாமி ஆலயம் மேலே இருந்துள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் மலை அடிவாரத்தில் பூஜைகள் செய்தும் தருமங்கள் செய்தும் வருகின்றனர்.
இந்த கோவில் அமைக்க என் முன்னோர்கள் அறிவுறுத்தலின்படி திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் வழிபட்டுவிட்டு சென்ற என் நிலத்தில் சுயம்புவாக அவதரித்திற்க்கும் சங்கிலி கருப்பண்ணசாமி, ரேணுகாம்பாள்,ஒன்டி முனீஸ்வரர் மற்றும் பரிவர்த்தன தெய்வங்களுக்கு ஆலயம் அமைக்க தீர்மானித்திருக்கிறோம்.
பிதரான தெய்வம் வலம்புரி விநாயகர், சங்கிலி கருப்பண்ணசாமி, வீரசண்முகர், ரேணுகாம்பாள், ஒன்டி
முனீஸ்வரர், காளியம்மன்,சப்த கன்னியர்கள், பஞ்சமுக சிவன், காலபைரவர், வராஹி அம்மன்,
அகத்தியா,
தன்வந்திரி,பாம்பாட்டி சித்தர், ஆஞ்சநேயர், அய்யனார், பிரதிஷ்டை செய்ய உள்ளோம்.
இந்த ஆலயத்திருப்பணியை ஸ்ரீ வராஹம் ஸ்வஸ்திக் அறக்கட்டளை எடுத்து நடத்துகிறது.
இங்கு சித்த மருத்துவ கூடம் மற்றும் ஆராய்ச்சி கூடம் அமைத்து எண்ணற்ற நோய்களுக்கு தீர்வு
காணவும்,நோயற்ற வாழ்வு வாழவும், இந்த கோவில் மற்றும் மருத்து கூடம் அமைய பெற உள்ளது.